தேர்தலை ரத்து செய்ய வேண்டும் : டாக்டர் கிருஷ்ணசாமி
தமிழகத்தில் ஏப்.6 ம் தேதி நடைபெற்று முடிந்த தேர்தல் உண்மையாக, நேர்மையாக நடந்த தேர்தல் அல்ல எனவே தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி புதியம்புத்தூரில் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதிய தமிழகம் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாம் கட்டமாக வேகமாக பரவி வருகிறது .மேலும் கொரோனா தடுப்பூசி பற்றி பரப்பப்படும் தவறான தகவலை பற்றி மனதில் கொள்ளாமல் எந்தவித பயமும் இன்றி பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள் ஆகும்.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் உண்மையாக ,நேர்மையாக நடந்த தேர்தல் அல்ல. இந்த தேர்தலை கணக்கிட்டால் அடுத்த தேர்தலில் எல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு காத்திருக்க மாட்டார்கள் அவர்களாகவே பெட்டியை வைத்து, ஓட்டு போட்டு அவர்களாகவே வாக்குகளை எண்ணி முடிவை அறிவித்து கொள்ளக் கூடிய சூழல் தான் உருவாகும் . எனவே நடந்த முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் எனக் கூறினார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu