ஓட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஓட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க தனக்கு வாக்களிக்குமாறு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன் பிரச்சாரம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகன் தனக்கு வாக்கு கேட்டு பூ பாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க பொதுமக்கள் இரட்டைஇலை சின்னத்தில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும் தான் வெற்றிபெற்றால் இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருவேன் என கூறி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்ந்து தமிழ்நாடு புதுச்சேரி விஸ்வகர்மா சமுதாய நல சங்கத்தினர் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனிடம் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ரீகன், முருகன், வேல்ராஜ், முருகேசன், எம்பெருமாள் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவு கடிதத்தை சங்க நிர்வாகிகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!