தொகுதி மக்களின் சேவகனாக இருப்பேன்- அதிமுக வேட்பாளர்

தொகுதி மக்களின் சேவகனாக இருப்பேன்- அதிமுக வேட்பாளர்
X

உங்களின் சேவகனாக இருந்து அரசு திட்டங்கள் அனைத்தையும் பெற்று தருவேன் என ஓட்டப்பிடாரம் தனித்தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் மோகன் போட்டியிடுகிறார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அவர், இன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காலாங்கரை, பெரியநாயகிபுரம், கோரம்பள்ளம், அந்தோணியார்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மோகன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவருக்கு அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து, பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்பளித்தனர். பிரச்சாரத்தின் போது அப்பகுதி மக்களிடம் பேசிய மோகன் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்குகளை சேகரித்தார். மேலும் தான் வெற்றி பெற்றால் உங்களின் சேவகனாக இருந்து உங்களின் குறைகளை நிறைவேற்றித் தருவேன் என அவர் வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
ai in future agriculture