தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி
X

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது, 115 பயனாளிகளுக்கு ரூ. 6.37 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின்போது, வருவாய்த்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் துறை, ஆவின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சியின்போது, முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை 5 பயனாளிகளுக்கு ரூ. 6000 மதிப்பிலும், விளாத்திகுளம் வட்டத்தில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரணம் நிவாரணத் தொகை, தற்காலிக இயலாமை உதவித்தொகை 22 பயனாளிகளுக்கு ரூ.169700 மதிப்பிலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை 3 பயனாளிகளுக்கு ரூ.4500 மதிப்பிலும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

மேலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா 5 பயனாளிகளுக்கு ரூ.197395 மதிப்பிலும், எட்டயபுரம் வட்டத்தில் திருமண உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை 8 பயனாளிகளுக்கு ரூ.118000 மதிப்பிலும், ஏரல் வட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை 5 பயனாளிகளுக்கு ரூ. 6000 மதிப்பிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், இலவச தேய்ப்பு பெட்டி 4 பயனாளிகளுக்கு ரூ.25592 மதிப்பிலும் வழங்கப்பட்டது.

மேலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.18668937 மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது. வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு விசை தெளிப்பான், தார்பாய் ரூ.31664 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.45000 மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திறன்பேசி வழங்கும் திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.135000 மதிப்பிலும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், இலவச தேய்ப்பு பெட்டி ரூ.32598 மதிப்பிலும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு சுயதொழில் மானியம் ரூ.500000 மதிப்பிலும், மகளிர் திட்டம் சார்பில் 10 பயனாளிகளுக்கு சுய உதவிக்குழு கடன் ரூ.41000000 மதிப்பிலும், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பிரதம மந்திரி கிராம குடியிருப்பு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.1200000 மதிப்பிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் ஒரு பயனாளிக்கு பயணியர் வாகனம் ரூ.1629000 மதிப்பிலும் ஆவின் சார்பில் கறவை மாடு வழங்குவதற்கான கடன் ஆணைகள் 4 பயனாளிகளுக்கு, தீவன புல் விதைகள் 2 பயனாளிகளுக்கு என மொத்தம் மொத்தம் 115 பயனாளிகளுக்கு 6 கோடியே 37 லட்சத்து 69 ஆயிரத்து 386 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

கூட்டத்தில், சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அரசு செயலாளர் தரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!