கோவில்பட்டியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

கோவில்பட்டியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

கோவில்பட்டியில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்ரமணியபுரம் 2வது தெருவில் வசித்து வருபவர் பால்பாண்டி மகன் முருகேசன் (28). இவர் வடக்கு அச்சங்குளத்தில் தீப்பெட்டி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை .

அவர் சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் . அவரது தந்தை சென்னையில் உள்ளார். தாயார் தீப்பெட்டி ஆபீஸில் வேலைக்கு சென்ற நேரத்தில் இவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!