ஸ்டெர்லைட்டில் புதன் முதல் ஆக்சிஜன் உற்பத்தி: கனிமொழி நம்பிக்கை
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டுள்ளது. வரும் புதன் கிழமை முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க வாய்ப்பு இருப்பதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள முடுக்கலான்குளத்தினை சேர்ந்த ஜெயந்திரன் என்பவரது மகன் அழகுமுருகராஜ்(24), ராமமூர்த்தி என்பவரது மகன் ராஜகோபால் (12). இருவரும் கடந்த 12 தேதி அங்குள்ள தோட்டத்தில் நின்று கொண்டு இருந்த போது மின்னல் தாக்கியதில் அழகுமுருகராஜ் உயிரிழந்தார். காயமடைந்த ராஜகோபால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று முடுக்கலான்குளத்தில் உள்ள அழகுமுருகராஜ் இல்லத்திற்கு சென்ற தமிழக சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியது மட்டுமின்றி நிவாரண நிதி ரூ 4லட்சத்தினையும் வழங்கினர்.
இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டுள்ளது. வரும் புதன் கிழமை முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், கொரோனா தொற்றாளார்களுக்கு தேவையான மருந்தக்களை கள்ளசந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்தால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். மேலும் கள்ளசந்தையில் விற்பனை செய்வது தடுக்கப்படும். அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளில் கொரோனா தொற்றுளார்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் இல்லை என்றாலும் கிடைப்பதற்கு அரசு தேவையான வழிவகை செய்யும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu