/* */

கோவில்பட்டி இரும்பு கடை திருட்டு வழக்கில் 4 பேர் கைது

கோவில்பட்டியில் இரும்பு கடையின் மேற்கூரையை பிரித்து ரூ.4லட்சம், 2டன் கம்பிகள் திருடிய வழக்கில் 4 பேர் கைது. மேலும் இருவரை தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

கோவில்பட்டி இரும்பு கடை திருட்டு வழக்கில் 4 பேர் கைது
X

கோவில்பட்டி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குமாரசாமி மகன் மனோஜ் (31). இவரும், இவரது நண்பர் கணேஷ்குமாரும் சேர்ந்து கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே இரும்பு கம்பி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 10ம் தேதி சனிக்கிழமை இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் கடைக்கு வந்த மனோஜ், பணம் வைத்திருந்த பேக்கை எடுத்து பார்த்த போது, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது சுமார் 2 டன் இரும்பு கம்பியும் காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர். இதில், முகமூடி அணிந்த மர்மநபர்கள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி இரும்பு கம்பிகளை திருடி லாரியில் ஏற்றுவதும், பேக்கில் இருந்த பணத்தினை எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது.

கொள்ளையர்களை பிடிக்க எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் லாரியின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்ககிடையில் நேற்று இரவு கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த 4 பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன் (43), நல்லதம்பி (30), ராஜா (30), சரவணன் (30) என்பதும், கோவில்பட்டி இரும்பு கடையில் இந்த மாதம் 10ம் தேதி 4 லட்சம் ரூபாய் பணம் மற்று 2 டன் இரும்பு கம்பியை கொள்ளையடித்து சென்றதையும், கடந்த மாதம் 10ந்தேதி கயத்தாரில் முருகன் என்பவருக்கு சொந்தமான இரும்புக்கடையில் ரூ 1 லட்சம் மதிப்புள்ள இருப்புகம்பிகளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் இந்த கும்பலில் தொடர்புடைய 2 பேர் கேரளா மாநிலத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையெடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்றுள்ளனர்.

Updated On: 18 July 2021 2:46 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...