உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி முழு வெற்றி பெறும் : துரைவைகோ

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி முழு வெற்றி பெறும் : துரைவைகோ
X

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இளைரசனேந்தலில் நடந்த மதிமுக ஆலோசனைக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைவைகோ 

இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி முழுமையாக வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இளைரசனேந்தலில் உள்ள தனியார் மண்டபத்தில் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோ கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து, துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் ஆசியுடன், மக்கள் ஆதரவுடன் வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி முழு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. சுமார் 20 ஆண்டுகால பிரச்னையாக இருந்த, இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் அல்லது தனி ஊராட்சி ஒன்றியமாக உருவாக்க வேண்டும். இபபிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மதிமுக சார்பில், ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், நடுவிற்பட்ட - பருவக்குடி இடையே உள்ள 20 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்தினால், தூத்துக்குடி துறைமுகத் திற்கு எளிதில் செல்ல முடியும். இதனால் தொழில் நகரங்களான ராஜபாளையம், கோவில்பட்டி பயன்பெறும் என்றும், சாலையை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ஏ.வ.வேலுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரும் சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இதற்காக முதல்வர் மற்றும் அமைச்சருக்கு தனது நன்றி தெரிவித்து கொள்வதாகவும் துரைவைகோ கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்