கோவில்பட்டியில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி: நாலாட்டின்புத்தூர் அணி வெற்றி

கோவில்பட்டியில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி: நாலாட்டின்புத்தூர் அணி வெற்றி
X

கோப்பையுடன் வெற்றிபெற்ற அணியினர்.

கோவில்பட்டியில் நடந்த மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் நாலாட்டின்புத்தூர் லாசா ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினர் வெற்றி பெற்றனர்.

கோவில்பட்டி பிலிப்ஸ் ஸ்போர்ட் கிளப் சார்பில் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நேற்று நடந்தது. இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில், நாலாட்டின்புத்தூர் லாசா ஸ்போர்ட்ஸ் அகாடமி ஏ அணியும், லாசா ஸ்போர்ட்ஸ் அகாடமி பி அணியும் மோதியது. இதில், 4க்கு 0 என்ற கோல் கணக்கில், லாசா ஸ்போர்ட்ஸ் அகாடமி ஏ அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றனர்.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு முன்னாள் கவுன்சிலர் ஜோதிபாசு தலைமை வகித்தார். ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி செயலாளர் கார்த்திக் ராமசாமி முன்னிலை வகித்தார்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை டாக்டர் திருமுருகன், ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், தொழிலதிபர்கள் அலெக்ஸ் சாமுவேல், பாலசிங்கம், முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர் அய்யாதுரை ஆகியோர் பங்கேற்று பேசினர்.

கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ஜெயசீலன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார்.

ஏற்பாடுகளை பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் கண்ணுசாமி, பொருளாளர் தங்கப்பூ, உறுப்பினர்கள் அழகுசேகர், வேலுசாமி, மகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story