எட்டையாபுரம் ஆட்டு சந்தையில் வியாபாரம் மந்தம்: விவசாயிகள் கவலை
எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையில் மழையின் காரணமாக வியாபாரம் சற்று மந்தமாக நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே தென் மாவட்டத்தில் புகழ்பெற்ற எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையில் மழையின் காரணமாக வியாபாரம் சற்று மந்தமாக நடைபெற்றது.
தென் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக விளங்கக் கூடிய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஆட்டுச்சந்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறுவது வழக்கம். இதில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, இராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் சந்தையில் தங்கள் ஆடுகளை விற்பதற்கும், வாங்கி செல்வதற்கும் வருகின்றனர். இந்நிலையில் இன்று பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ரம்ஜான் 10 நாட்களே உள்ள நிலையில் வியாபாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
காலையிலிருந்து பெய்து வந்த சற்று சாரல் மழையின் காரணமாக வியாபாரத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. வழக்கமாக 2000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகும். இன்று நடந்த சந்தையில் 1000 ஆடுகளே விற்பனை ஆகின. இதனால் 1.25 கோடி ரூபாய் அளவிலான வியாபாரம் நடைபெற்றது. வழக்கமான நாட்களில் 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் அளவில் வியாபாரம் நடைபெறுவது வழக்கம். ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையிலும் வியாபாரிகள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி செல்ல வந்தபோது மழையின் காரணமாக விற்பனை பாதித்ததால் சற்று கவலையுடன் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu