தூத்துக்குடியில் கார், வேன் கண்ணாடிகள் உடைப்பு : எஸ்.ஐ மகன் உட்பட 2 பேர் கைது

தூத்துக்குடியில் கார், வேன் கண்ணாடிகள் உடைப்பு : எஸ்.ஐ மகன் உட்பட 2 பேர் கைது
X
தூத்துக்குடியில் கார், வேன் கண்ணாடிகள் உடைப்பு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கார், வேன் கண்ணாடிகள் உடைப்பு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி ராஜீவ் நகர், பர்மா காலனி நிகிலேசன் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி இருந்த 9 கார், 2வேன், ஒரு ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடிகளை நேற்று மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் இன்று சிப்காட் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சிப்காட் ஆய்வாளர் வேல்முருகன், உதவி ஆய்வாளர் சங்கர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டார்.

மேலும், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக தூத்துக்குடி அண்ணா நகர் 5வது தெருவைச் சேர்ந்த பிச்சையா மகன் பாரதி (25), அண்ணா நகர் 8வது தெருவைச் சேர்ந்த அருணாசலம் மகன் அஜித்குமார் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இதில், கைது செய்யப்பட்டுள்ள பாரதியின் தந்தை பிச்சையா தூத்துக்குடி நில மோசடி தடுப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!