வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் ஓதுக்கீடு

வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் ஓதுக்கீடு
X
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடிகளுக்கு ஓதுக்கீடு.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்கள் சந்திரமோகன் பிரசாத் காஸியாப். மற்றும் ராம் லஹான் பிரஷாத் குப்தா, முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் .வே.சாந்தா தலைமையில் நடைப்பெற்றது. பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர்.வே.சாந்தா. தெரிவித்ததாவது,

நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல்-2021 தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குசாவடிகளுக்கு கணினி மூலமாக குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்படும். தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் பதிவு செய்யும் பணி டீர்நுடு நிறுவன பொறியாளர்களால் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் பொறுத்தப்படவுள்ளது. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் நடத்தும் நாளுக்கு முதல் நாள் அனுப்பிவைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் .வே.சாந்தா. தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) .ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .புண்ணியகோட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருவாரூர் பாலசந்திரன், மன்னார்குடி அழகர்சாமி, நன்னிலம் பானுகோபன், திருத்துறைப்பூண்டி கீதா, தேர்தல் வட்டாட்சியர் திருமால் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story