கொரோனா சந்தேகங்களுக்கு அவசர கால கட்டுபாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்

கொரோனா சந்தேகங்களுக்கு அவசர கால கட்டுபாட்டு மையத்தை  தொடர்பு கொள்ளலாம்
X
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா சந்தேகங்களுக்கு அவசர கால கட்டுபாட்டு மைய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் எனமாவட்ட ஆட்சியர் .வே.சாந்தா. தகவல் தெரிவித்துள்ளார்..

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிக அளவில் பரவி வருவதால் பொதுமக்கள் கொரோனா தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் (அல்லது) தேவையான மருத்துவ உதவிகள் பெறலாம்,

இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால கட்டுபாட்டு மையத்தில் செயல்படுகிறது. இங்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 04366 – 1077, 04366 – 226623

அதுபோல திருவாரூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை எண்கள் 9342132708, 9025260744 மற்றும் வாட்ஸ் அப் எண் 9154153673 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் .வே.சாந்தா. தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!