திருவாரூர் தியாகராஜர் கோவில் திருவாதிரை திருவிழாவில் பாததரிசன நிகழ்ச்சி
சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜசுவாமி.
திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜ சுவாமி கோயில் இருந்துவருகிறது. இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய தேராகும். இந்நிலையில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பாத தரிசன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் இன்று (20ந் தேதி) இந்த பாததரிசன நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி நீலோத்தம்பாள் சன்னதி அருகே இதற்கான பந்தகால் நடும் பணி கடந்த 9 ந் தேதி நடைபெற்றது.
இதனையடுத்து நேற்று முன்தினம் (18ந் தேதி) இரவு தியாகராஜர் தனது சன்னதியில் இருந்து புறப்பட்டு தனக்கே உரிய அஜபா நடனத்துடன் ராஜநாராயணன் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், நேற்று (19 ந் தேதி) சிறப்பு பூஜைகள் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்ற்றது. இதனையடுத்து இன்று அதிகாலை 5 மணி முதல் தியாகராஜபெருமான் பதஞ்சலி வியாக்கரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கடும் குளிர் மற்றும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 5 மணி முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தியாகராஜப் பெருமானை வழிபட்டனர். மேலும் இந்த பாத தரிசன நிகழ்ச்சியையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu