திருவாரூர் மருத்துவமனைக்கு ரூ.12 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்

திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ரெட்கிராஸ் அமைப்பு சார்பில் ரூ 12 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருவாரூர் ரெட் கிராஸ் அமைப்பு சார்பில் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு 12 லட்சம் மதிப்பிலான இரண்டு வென்டிலேட்டர் கருவிகள் 3 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் முகக்கவசம் உட்பட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு).செ.பொன்னம்மாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .வி.ஆர்.ஸ்ரீனிவாசன், மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்.பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினர்.
இந்நிகழ்வில் --சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் மரு.உமா, மாவட்ட ரெட்கிராஸ்.சேர்மேன்.ஆர்.எஸ்.இராஜகுமார், ரெட்கிராஸ் செயலாளர் .ஜே.வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu