திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
X

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சிவசுப்ரமணியன் கலந்து கொண்டார். 

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியன் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் கல்யாணமகாதேவி கிராமத்தில் நடைப்பெற்று வரும் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன்,சுற்றுசூழல் காலநிலை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் மெய்யநாதன்,திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கலைவாணன் ஆகியோர் துவக்கி வைத்து தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழையும் வழங்கினர்.

தொடர்ந்து திருவாரூர் மருத்துவகல்லூரியில் அமைக்கப்பட்டுவரும் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயார் படுத்தும் பணிகளையும்,குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவுக்காக கட்டப்பட்டுவரும் கட்டிட பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்ணில் நடைப்பெற்ற ஆய்வு கூட்டத்திலும் கலந்துக்கொண்டு அதிகாரிகளுடன் விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இதுவரை தமழிகத்திற்கு வந்த தடுப்பூசிகள் 1,16,57,690, இதில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள் 1,10,34,760, கையிருப்பு உள்ள தடுப்பூசி மருந்து 3,44,342. தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்பட அனைவருக்கும் இரண்டு தடுப்பூசி போட வேண்டுமானால் 11 கோடியே ௩௬ லட்சம் தடுப்பூச்சி மருந்து தேவை. இதில் இதுவரை 1,16,57,690 வந்த்து போக மீதி 10 கோடியே 20 லட்சம் தடுப்பூசி தேவை படுகிறது.

அதை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.மத்திய அரசு ஜூன் மாத ஒதுக்கிடாக 45லட்சம் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக சொல்லி உள்ளது. பாக்கி தடுப்பூசி மருந்தையும் தர சொல்லி இன்று மாலை டெல்லியில் பிரதமரை சந்திக்கும்முதல்வர் வற்புறுத்துவார் என்றார்.

மேலும் மூன்றாம் அலையை எதிர்கொள்ள தமிழகம் தயாராகி வருகிறது..அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 40,000 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் காலியாக உள்ளது. மருத்துவமனைகள், அனைத்து தனியார் சேவை மையங்கள்.,சித்தா,யுனானி,ஹோமியோபத மருத்துவமனைகள் என்பன அனைத்து இடங்களிலும் 1 லட்சம் படுக்கைகள் தயாராகி வருகிறது. அதேபோல் அனைத்து மருத்துவ மனைகளிலும் தனியாக குழந்தைகள் சிகிச்சை பிரிவு,குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் ௧௬ நபர்கள் கருப்பு பூஞ்சை பாதிக்கப்பட்டுள்ளனர்.என தெரிவித்தார்.

இந்த நிகழ்சிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர்.ராதாகிருஷ்ணன் ஆட்சியர் காயத்ரி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்