தை அமாவாசையை முன்னிட்டு திருவாரூர் கமலாலய குளத்தில் தர்ப்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு திருவாரூர் கமலாலய குளத்தில் தர்ப்பணம்
X

திருவாரூர் கமலாலய குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தை அமாவாசையை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.

தை மாதம் வரும் தை அமாவாசை சிறப்புக்குரியதாக கருதப்படும் நிலையில் இன்று பிரசித்தி பெற்ற திருவாரூர் தியகராஜர் திருக்கோயில் கமலாலய திருக்குளத்தில் ஏராளமானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இந்த தை அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டால் தன் முன்னோர்களின் ஆசி தன் சந்ததியினருக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் சிறப்பான இந்த கமலாலய திருக்குளத்தில் தர்ப்பணம் கொடுத்தால் காசிக்கு இணையான பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகமாகும்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!