"சகி" ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடடம்:மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
திருவாரூரில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள "சகி" ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.
திருவாரூர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள "சகி" ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடமானது சுமார் 300 சதுர.மீட்டரில் வரவேற்பு அறையுடன் கூடிய ஐந்து அறைகள் கொண்ட தனி கட்டிடமாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
"சகி" ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடமானது தனியார் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறையினால் பாதிக்கப்பட்டுவரும் பெண்களுக்கு ஏற்படும் அனைத்து கொடுமையிலிருந்து மீண்டு வாழ உளவியல் சட்டம் சார்ந்த ஆலோசனைகளும், சேவைகளும், தேவைபடும்பட்சத்தில் காவல்துறையின் உதவி, மருத்துவ உதவி மற்றும் சட்ட உதவிகளும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினரை சந்தித்து உரையாடுவதன் மூலம் இணக்கமான சூழ்நிலை உருவாக்கியும், பாதிக்கப்பட்ட பெண்கள், தங்கள் குடும்பத்தினருடன் வாழ்வதற்கு ஆவன செய்து அதன் பின்னர், தொடர் கண்காணித்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிகழ்வில், திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.ஜோசப்ராஜ், திருவாரூர் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கண்காணிப்பாளர் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu