திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் உண்ணாவிரத போராட்டம்

திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் உண்ணாவிரத போராட்டம்
X

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், திருவாரூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்.

தமிழக ஆளுநர் உடனடியாக, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வலியுறுத்தல்

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில். திருவாரூர் ரயில் நிலையம் முன்பு, மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக ஆளுநர் உடனடியாக நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. உண்ணாவிரதப் போராட்டத்தை. திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் மாரிமுத்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்ந உண்ணாவிரதப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!