திருவாரூரில் அனுமதியின்றி வெட்டப்பட்ட பனைமர கட்டைகள் பறிமுதல்

திருவாரூரில் அனுமதியின்றி வெட்டப்பட்ட பனைமர கட்டைகள் பறிமுதல்
X

திருவாரூரில் பறிமுதல் செய்யப்பட்ட பனை மரக்கட்டைகள்

திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறையின் அனுமதியின்றி வெட்டப்பட்ட பனைமர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூர்- மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இந்நிலையில் விளமல் அருகே செயல்பட்டு வரும் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாசலில் இடையூறாக இருக்கும் 5 க்கும் மேற்பட்ட பனைமரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

அதற்கு அனுமதி கிடைக்காத நிலையில கடையின் உரிமையாளர் நெடுஞ்சாலைத்துறையின் அனுமதியின்றி மரம் வெட்டும் காண்டிராக்டர் குமரசேன் மூலம் பனைமரங்களை வெட்டி டிராக்டர் மூலம் எடுத்து செல்ல முயன்றபோது தகவலறிந்து அங்கு வந்த வழக்கறிஞர் மணி தலைமையிலான தேசிய சட்ட உரிமை கழகத்தினர் டிராக்டரை மறித்து சிறைபிடித்ததோடு மரங்களை பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை மற்றும் தாலுகா காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மரம் வெட்டப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil