தேசிய தன்னார்வ இரத்ததான தினம்: திருவாரூரில் சிறப்பு முகாம்

தேசிய தன்னார்வ இரத்ததான தினம்: திருவாரூரில் சிறப்பு முகாம்
X

திருவாரூரில் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தையொட்டி இரத்ததான முகாம் நடைபெற்றது.

திருவாரூரில் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தையொட்டி இரத்ததான முகாம் நடைபெற்றது.

திருவாரூரில் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தையொட்டி இரத்ததான முகாம் நடைபெற்றது.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் கருத்தரங்கு அறையில் இரத்த வங்கியும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமும் இணைந்து தேசிய இரத்ததான தின நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலரும், காசநோய் துணை இயக்குநருமான மரு.யு.புகழ் வரவேற்று பேசினார். இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.ஆர்.பிரித்தா திட்ட விளக்கவுரையாற்றினார்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஜோசப்ராஜ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.என் செல்வகுமார், சுகாதாரம் கலந்து பணிகள் துணை இயக்குநர் வி.சி.ஹேமசந்த்காந்தி, நோய் குறியீட்டுத்துறை தலைவர் மரு.இரா.உமா உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தன்னார்வ இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் மட்டும் ஷீல்டுகள் வழங்கப்பட்டன. முடிவில் எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க மாவட்ட மேற்பார்வையாளர் எஸ்.ராமஜெயம் நன்றி கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!