திருவாரூரில் 1,072 பேருக்கு அமைச்சர் சக்கரபாணி நலத்திட்ட உதவி

திருவாரூரில் 1,072  பேருக்கு அமைச்சர் சக்கரபாணி நலத்திட்ட உதவி
X

திருவாரூரில் அமைச்சர் சக்கரபாணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவாரூர் மாவட்டத்தில் 1,072 நபர்களுக்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்

திருவாரூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள 1072 பயனாளிகளுக்கு தலா சுமார் 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கல்வி உதவி தொகை, வங்கி கடன் மானியம், திருமண உதவித் தொகைக்கான ஆணைகள், தையல் இயந்திரம், சலவை இயந்திரம், வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் 1072 நபர்களுக்கு ஒரு கோடியே 98 லட்சத்து 56 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழக முதல்வருக்கு கல்லூரி மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்,மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, முன்னாள் அமைச்சர் மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா