தீபாவளிக்கு புத்தாடை வாங்கினால் ஆட்டுக்கிடாய் பரிசு

தீபாவளிக்கு புத்தாடை வாங்கினால் ஆட்டுக்கிடாய் பரிசு
X
திருவாரூரில் தீபாவளிக்கு ரூ.1,000 க்கு துணிகள் வாங்கினால் ஆட்டு கிடாய் பரிசு என நூதன விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தீபாவளிக்கு புத்தம்புது துணிகள் எடுப்பதற்காக பொதுமக்கள் ஜவுளி கடைகளை நோக்கி படை எடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் திருவாரூரில் உள்ள ஒரு ஜவுளி கடையொன்றில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக விநியோகிக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரம் நகர்பகுதி முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடையில் ரூ.1,000 க்கு துணிகள் வாங்கினால் ஒரு பரிசு கூப்பன் வழங்கப்படும். வரும் 4ம் தேதி இரவு 10 மணிக்கு நடக்கும் பரிசு கூப்பன் குலுக்கலில் முதல் பரிசாக ஒரு நபருக்கு தங்க நாணயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 2, 3, 4ம் பரிசுகளாக தலா மூன்று 'ஆட்டுக்கிடாய்கள்' பரிசாக வழங்கப்படும். 5ம் பரிசாக 25 நபருக்கு பட்டுப்புடவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள விளம்பரம் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!