திருவாரூரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம்

திருவாரூரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். 

திருவாரூரில் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு, அடையாள அட்டை வழங்கிட கோரி வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன் சிஐடியு வின் சுமைப் பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது சுமைப் பணி தொழிலாளர்களை அவுட்சோர்சிங் முறையில் தேர்வு செய்ய கோரப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கூலி உயர்வு மற்றும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்ளை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!