திருவாரூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் துவக்கம்
திருவாரூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் பள்ளிகளில் 1 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை குறைத்திடும் வகையில் இல்லம் தேடிக்கல்வி திட்டத்தினை மாநிலம் முழுவதும் செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சியில் இல்லம் தேடிக்கல்வி மையத்தினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கலைவாணன் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் திட்ட இலக்கான 3505 மையங்களில் தற்போது வரை தேர்வு செய்யப்பட்ட 1100 தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் மையம் இன்று முதல் மாவட்டம் முழுவதும் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் ஒன்றியக்குழுத்தலைவர் தேவா, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu