ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
X

கர்நாடக அரசை கண்டித்து திருவாரூரில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ள கர்நாடக அரசை கண்டித்து திருவாரூரில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அண்மையில் கர்நாடக உயர் நீதிமன்றம் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடகா அரசின் உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தது .இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே த.ம.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் குழந்தைகள் கலந்துகொண்டு கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதில் மாவட்ட தலைவர் நவாஸ், தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!