கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில்  இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
X

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்

பலத்த மழையால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

வங்க கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய தினம் சராசரியாக 5.5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதனையடுத்து தொடர் மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

Tags

Next Story
ai and business intelligence