/* */

ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம்- யோகா நிகழ்ச்சி: ஆட்சியர் தொடங்கி வைப்பு

திருவாரூரில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம், யோகா மற்றும் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம்-  யோகா நிகழ்ச்சி: ஆட்சியர் தொடங்கி வைப்பு
X

திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் ப. காய்த்ரிகிருஷ்ணன் தலைமையில் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் மற்றும் யோகா நிகழ்ச்சியினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர்.ப.காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மனுநீதிச்சோழன் மண்டப வளாகத்தில் திருவாரூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா, மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 75வது ஆண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் வகையில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் மற்றும் யோகா நிகழ்ச்சியினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர்.ப.காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் .எம்.செல்வராஜ் , திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் .பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தனர்.

இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையிலும் காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நமது நாட்டின் 744 மாவட்டங்களிலும் தலா 75 இளையோர்கள் கலந்து கொள்ளும் சுதந்திர தின ஓட்டத்தினை நடத்துகிறது. மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட அளவிலான நிகழ்வும், 75 கிராம அளவிலான நிகழ்வும் நடத்தப்படுகிறது.

அந்தவகையில், திருவாரூர் மனுநீதிச்சோழன் மண்டப வளாகத்தில் நேரு யுவ கேந்திரா, மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 75வது ஆண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பிக்கும் வகையில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம், யோகா மற்றும் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் .முருகுவேந்தன், மாவட்ட இளையோர் உதவி திட்ட அலுவலர் .பாலகிருஷ்ணன், பழனியாண்டவர் திருக்கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் .பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...