திருவாரூர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது

திருவாரூர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது
X

திருச்சி நகராட்சி மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்ததை பார்வையிட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அதனை வெளியேற்ற உத்தரவிட்டார்.

திருவாரூர் நகராட்சி விஜயபுரம் அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் புகுந்த மழை நீரை வெளியேற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.

கனமழையின் காரணமாக திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட விஜயபுரம் அரசு மருத்துவமனையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மோட்டார் இயந்திரம் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்பணியினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து மழைநீர் வெளியேற்றும் பணியினை விரைவுப்படுத்துமாறு நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 7 உள்நோயாளிகளும் தற்பொழுது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!