திருவாரூரில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மின்வாரிய குறை தீர் கூட்டம்

திருவாரூரில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மின்வாரிய குறை தீர் கூட்டம்
X

திருவாரூரில் இன்று மின்வாரிய நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருவாரூரில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மின்வாரிய நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று மின் வாரிய நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குறைத்தீர் கூட்டத்தில் ஏராளமான நுகர்வோர்கள் கலந்து கொண்டு, தங்களது குறைகளை மனுக்களாக அளித்தனர். பல மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டும், மற்ற மனுக்களை தீர்வு காணுவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தாரா தலைமையில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 20 க்கும் மேற்பட்ட அதிகாாிகள் கலந்து கொண்டு நுகர்வோர்களை தனித் தனியே அழைத்து குறைகளைக் கேட்டறிந்தனர். இனிவரும் காலங்களில் மாதத்தின் 3 வது வெள்ளிக்கிழமை தொடர்ந்து குறைதீர் கூட்டம் நடைபெறும் என்பதால் நுகர்வோர்கள் அதை பயன்படுத்தி கொண்டு மின்வாரியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!