ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி திருவாரூர்.

ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி திருவாரூர்.
X

ஊரடங்கால் வெறிச்சோடிய திருவாரூர் சாலை

ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக திருவாரூரில் சாலைகள் வெறிச்சோடின

அத்தியாவசிய தேவையின்றி சுற்றி திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து எச்சரித்து திருப்பி அனுப்பி வரும் காவல்துறையினர்.

தமிழகத்தில் கொரனோ இரண்டாவது அலையை கட்டுபடுத்தும் விதமாக தளர்வு களுடன் கூடிய இருவார ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் ஞாயிறு தோறும் மற்ற எந்த வித தளர்வுகளும் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூரில் ஞாயிற்றுகிழமையான இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதாலும் பொது போக்குவரத்துக்கு தடை தொடர்வதாலும் அனைத்து பிரதான சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் காவல் துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதுடன் அத்தியாவசிய தேவையின்றி சுற்றி திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி கொரனோ பரவலை தடுக்க அரசு அமல்படுத்தியுள்ள முழு ஊரடங்கை மதித்து பின்பற்றுமாறும் மீறினால் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்.

இதில் ஒரு சிலர் காவல்துறை ஆய்வாளருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். போக்குவரத்து காவல்துறையினரும் ரோந்து பணியை தீவிரபடுத்தியதோடு ஊரடங்கு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!