/* */

சேதமடைந்த திருவாரூர் கமலாலயக்குளம்: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கண்டுபிடித்த சிலைகளை விட திமுக ஆட்சியில் 40 % அதிகமான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

HIGHLIGHTS

சேதமடைந்த திருவாரூர்  கமலாலயக்குளம்:   அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
X

திருவாரூர் கமலாலய குளத்தை ஆய்வு செய்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் கமலாலயக் குளத்தின் ஒரு பகுதி நேற்று பெய்த கனமழையின் காரணமாக சரிந்து விழுந்த இடத்தை இந்துசமய அறநலத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது: உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் கமலாலயக் குளம் ஒரு கரை சரிந்து விழுந்ததை கேள்விப்பட்டவுடன் தமிழக முதல்வர் இந்து சமய அறநிலை துறை மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் உடனடியாக தொடர்பு கொண்டு விழுந்த கரைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும் குளிக்க வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

முழுமையாக இடிந்த மதில் சுவரை கட்டுவதற்கும் ஒட்டுமொத்தமாக கமலாலயக் குளத்தின் மதில் சுவரை வல்லுனர்களை கொண்டு அதன் ஸ்திரத் தன்மையை ஆராய்ந்து, நிரந்தரமான ஒரு தீர்வை காண்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறையும் ஒருங்கிணைந்து அதிவிரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு புனரமைத்து, குளம் முழுவதும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் கமலாலய குளத்தில் மதில் சுவர் கட்டி முடிக்கப்படும்.

தியாகராஜர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஓடை காணாமல் போயிருப்பதாக எழுப்பிய கேள்விக்கு, காணாமல் போவதற்கு இது ஒன்றும் மளிகை பொருள் அல்ல. இடம் அங்கேயேதான் இருக்கும். குறிப்பிட்டிருக்கும் அந்த இடத்தை ஆய்வு செய்து, சட்டப்படி அந்த இடங்களை மீட்பதற்காகன நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஏற்கெனவே இந்து சமய அறநிலை துறை ஆய்வு மேற்கொண்டிருக்கிறது.

அந்த இடங்களில் ஆக்கிரமிப்பு உண்மையில் இருக்கும் ஆனால் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அந்த இடங்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு துறைக்கு சொந்தமான சொந்தமாக சொந்தம் ஆக்கப்படும். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை விட இந்த ஐந்து மாத திமுக ஆட்சியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான சிலைகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன. முழுவதுமாக ஓராண்டு திமுக ஆட்சி நிறைவு பெறும்போது வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சிலைகள் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளன. எத்தனை சிலை கடத்தல் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை அளிப்போம்.

கமலாலயத்தில் குளத்திற்கு என்ற நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது தலைவர் கலைஞர் விளையாடிய இடம் இது. சுற்றுலா வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவதற்கு உண்டான பணிகளை நிச்சயம் இந்து சமய அறநிலையத் துறையும் மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ளும் என்றார் அமைச்சர் சேகர்பாபு.

Updated On: 26 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?