திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைப்பு

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைப்பு
X
கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் 2022-ல் நடைபெறவுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களுக்கு பொதுமக்கள் தேர்தல் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியரகத்தில் 27.01.2022 முதல் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ளது.

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் விவரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04366-220112 என்ற எண்ணில் தெரிவித்திடலாம் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!