திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பாேலீசார் திடீர் சோதனை

திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பாேலீசார் திடீர் சோதனை
X

திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர்.

திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனையில் ரூ.25,800 கைப்பற்றி விசாரணை.

திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை மேற்கொண்டது. காவல் துணைக் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் நடைபெற்ற சோதனையில் அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக புரோக்கர்கள் வைத்திருந்த ரூபாய் 25,800 ரொக்கத்தை கைப்பற்றினர்.

இதில் திருவாரூரை சேர்ந்த புரோக்கர்கள் ராமச்சந்திரன், செந்தில்குமார், பிரசாத், ராகுல்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையின்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, சித்ரா உள்ளிட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!