திருவாரூரில் கோடை வெயிலையொட்டி அ.தி.மு.க நீர்மோர் பந்தல் திறப்பு

திருவாரூரில் கோடை வெயிலையொட்டி அ.தி.மு.க  நீர்மோர் பந்தல் திறப்பு
X

திருவாரூரில் அதிமுக சார்பில்  நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்து இளநீர் வழங்கினார்.

திருவாரூரில் கோடை வெயிலையொட்டி அ.தி.மு.க சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பாக நீர் மோர் பந்தல் திறக்க வேண்டும் என தலைமை கழகம் அறிவுறுத்தியது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக திருவாரூர் மாவட்ட கழக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோருடன் சேர்த்து இளநீர்,தர்பூசணி, வெள்ளரி போன்ற தாகத்தைத் தீர்க்கும் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. கோடை காலம் முழுவதும் மக்களின் தாகத்தை தீர்க்கும் விதமாக அ.தி.மு.க. சார்பாக நீர் மோர் பந்தல் செயல்பட உள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!