திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 ஊழியர்களுக்கு கொரனோ தொற்று உறுதி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 ஊழியர்களுக்கு கொரனோ தொற்று உறுதி
X
ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் ஆறு ஊழியர்களுக்கு கொரனோ தொற்று உள்ளதா என பரிசோதனை.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஏழு ஊழியர்களுக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் ஆறு ஊழியர்களுக்கு கொரனோ தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஆட்சியரின் உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஏழு நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தால் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் செய்தும் கிருமி நாசினி வழங்கிய பின்னர் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!