கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் நிவாரணம்

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் நிவாரணம்
X

வாரிசுதாரர்களுக்கு காசோலை வழங்கும் மாவட்ட ஆட்சியர்.

கொரோனாவால் உயிரிழந்த 2 அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் முதல்வர் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரிந்து கொரோனா நோய் தடுப்பு பணியில் முன்களப்பணியாளர்களாக ஈடுபட்டிருந்த மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ என்பவர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்தார். அவரது வாரிசுதாரர் (மனைவி) சுந்தரி என்பவருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதேபோல் குடவாசல் வட்டாரத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) குருஅண்ணாதுரை என்பவர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்தமையால் அவரது வாரிசுதாரர்(மனைவி) மாலதி என்பவருக்கு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் கலந்து கொண்டு காசோலை வழங்கினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!