எம்ஜிஆரின் 34 வது நினைவு தினம்: திருவாரூரில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை

எம்ஜிஆரின் 34 வது நினைவு தினம்: திருவாரூரில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை
X

திருவாரூரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆரின் 34 ஆவது நினைவு தினத்தையொட்டி திருவாரூர் ஒன்றிய, நகர கழகங்கள் சார்பாக மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுகவின் நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவு தினம் இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதனையொட்டி திருவாரூர் ஒன்றிய, நகர கழகங்கள் சார்பாக இருசக்கர வாகனங்களில் பேரணியாக வந்து திருவாரூர் புது தெருவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர்கள் பி.கே.யு. மணிகண்டன், செந்தில் வேல், மாவட்ட கழக பொருளாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!