திருத்துறைப்பூண்டி அருகே இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது
X

ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புவனேஸ்வரி.

திருத்துறைப்பூண்டி அருகே இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து. ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கற்பகநாதர்குலத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (34), இவருக்கு கண்ணன் என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கற்பகநாதர் குளத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். கற்பகநாதர்குளம் அருகே ஜாம்பவானோடை கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன் என்பவரும் புவனேஸ்வரியும் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

புவனேஸ்வரியின் கணவர் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மதிவாணன் புவனேஸ்வரியிடம் தவறான முறையில் பழக முயற்சித்ததால் இதை தனது தாயாரிடம் கூறியுள்ளார் புவனேஸ்வரி. இதன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் தாயார் மதிவாணனை கண்டித்து அனுப்பியதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் பள்ளி முடிந்தவுடன் வெளியே வந்த புவனேஸ்வரி மீது இருசக்கர வாகனத்தில் வந்த மதிவாணன் மோதிவிட்டு கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து தன்னிடம் இருந்த கத்தியை கொண்டு புவனேஸ்வரியின் மீது கழுத்து , நெஞ்சு மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் குத்திவிட்டு தானும் தனது கையில் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தெரிவித்துவிட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். புவனேஸ்வரி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மதிவாணன் காவல்துறையின் கஸ்டடியின் கீழ் திருத்துறைப்பூண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து முத்துப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!