திருத்துறைப்பூண்டி அருகே கிராம மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே கிராம மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
X

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கொருக்கை கிராமத்தில் மறியஸ் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது சாலையில் மரக்கட்டைகளை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கொருக்கை கிராமத்தில் வாய்க்கால் புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள 14 கிற்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றுமாறு கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக இன்று வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்த பொழுது அப்பகுதியில் குடியிருப்போர் தங்களது வீடுகளை அகற்றக்கூடாது என கூறி சாலை நடுவே மரக்கட்டைகளை போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் வேறு பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்தபின் இப்பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கை விட்டுச் சென்றனர்.

Tags

Next Story
why is ai important to the future