திருத்துறைப்பூண்டி அருகே ஊராட்சி மன்ற நிர்வாகிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே ஊராட்சி மன்ற நிர்வாகிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
X

ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலரை கண்டித்து திருத்துறைப்பூண்டி திருவாரூர் நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுப்பட்டனர்.

ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலரை கண்டித்து திருத்துறைப்பூண்டி திருவாரூர் நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட கச்சனம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்(கம்யூனிஸ்ட்) மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரை கண்டித்து திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செயல்படாத ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும், தேவைக்கு அணுக முடியாமல் இருக்கும் ஊராட்சி மன்ற செயலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரை கண்டித்தும் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதனால் திருவாரூர் திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது. காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!