முக கவசம் இனிப்புகள் வழங்கி திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதையொட்டி திருத்துறைப்பூண்டியில் முக கவசம், இனிப்புகள் வழங்கியும், வழங்கி வெடி வெடித்தும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்.

சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று இன்று அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியி ஏற்கின்றார்ர அதனை கொண்டாடும் விதமாக திருத்துறைப்பூண்டி நகர திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நகர செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன் தலைமையில் வெடி வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள். கபசுர குடிநீர் .முக கவசம் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திமுக தலைவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர் இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் முகில் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிக்கந்தர். சுந்தர் முன்னாள் தலைவர் சிங்களாந்தி கூட்டுறவு சொசைட்டி, மாயா மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர். சக்திவேல் மாவட்ட பிரதிநிதி .வசந்த் நகர இளைஞரணி அமைப்பாளர். கமல் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் .காளிதாஸ் நகர இலக்கிய அணி.குமரன் நகர இளைஞரணி துணை அமைப்பாளர். ஜாகிர் உசேன் மாவட்ட பிரதிநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!