திருத்துறைப்பூண்டியில் சாலையை சீரமைக்கக்கோரி போராட்டம்

திருத்துறைப்பூண்டியில் சாலையை சீரமைக்கக்கோரி போராட்டம்
X

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் தலைமையில், பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்த சாலை மறியல் போராட்டம். 

நகரின் மையப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், நகராட்சிக்குட்பட்ட வேதை சாலையில் இருந்து, பெரிய சிங்களாந்தி ரயில்வே கேட் வரை உள்ள சாலை, நாகை சாலையில் இருந்து அரியலூர் தமிழர் தெரு சாலை உள்ளிட்ட சாலைகள், மழையால் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. அதனை சரி செய்துதர கோரியும், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் தலைமையில், பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.

பின்னர், நகராட்சி நிர்வாகம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சரிசெய்து தருவதாக தெரிவித்ததன் பேரில், தற்காலிகமாக சாலை போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை, வேதாரண்யம், முத்துப்பேட்டை பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்