திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மேலகொருக்கை கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக குடிநீர் வராததால் கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் அதிகாரிகளையும் கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குடிநீர் பிரச்சினையை சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக, திருத்துறைபூண்டி - நாகப்பட்டினம் சாலையில் இடையே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!