திருத்துறைப்பூண்டி: போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

திருத்துறைப்பூண்டி: போக்சோ சட்டத்தின் கீழ் ஒருவர் கைது
X
பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததன் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் நடவடிக்கை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டியமூலை சேர்ந்த முருகையன் என்பவரது மகன் செல்லப்பா என்கிற ஸ்ரீகாந்த் (21) .இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் தற்போது இவர் சொந்த ஊர் திரும்பிய நிலையில், அதே பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி படித்து வரும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீகாந்த் மீது போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்து,அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai solutions for small business