ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு

ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு
X

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு திமுக நகர செயலாளர் பாண்டியன் தங்க மோதிரம் பரிசளித்தார்.

ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் திமுக நகர செயலாளர் பாண்டியன் தலைமையில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் வீதம் 20 குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் வழங்கினார். மேலும் பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் 150 நரிக்குறவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளும் 3 பேருக்கு சலவை பெட்டியும் வழங்கப்பட்டது.

இதேபோல் முத்துப்பேட்டையில் பேரூர் கழக செயலாளர் கார்த்திக் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஏழை,எளியோர் மற்றும் துப்புறவு பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் .

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது