திருத்துறைப்பூண்டி அருகே வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்.

திருத்துறைப்பூண்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதில் முறைகேடு செய்துள்ள நிர்வாகத்தை கண்டித்து விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதில் முறைகேடு செய்துள்ள நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசால் கடன் தள்ளுபடி செய்துள்ள பயனாளிகளின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஒன்றிய பொருளாளர் சிவக்குமார் தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்பு 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!