அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி  பலி
X

சின்னத்துரை

திருத்துறைப்பூண்டி அருகே அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியானார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் சின்னத்துரை (31). இவர் இன்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பேனர் வைத்தபோது, அருகில் இருந்த மின்சார கம்பியில் பட்டதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த வந்த முத்துப்பேட்டை போலீசார், உடலை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருத்துறைப்பூண்டி அரசு மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்த சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இவரது மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!