/* */

மருந்தீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா நிறுத்தம்

திருத்துறைப்பூண்டியில் கொரானா பரவல் காரணமாக மருந்தீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா நிறுத்தம்.

HIGHLIGHTS

மருந்தீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா நிறுத்தம்
X

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலம் ஆகும். இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா துவங்கி வெகு விமர்சையாக நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளான முக்கிய நிகழ்வாக சித்திரை தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். சென்ற ஆண்டு கொரானா பரவல் காரணமாக இக்கோயிலில் சித்திரை திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது நடைபெறும் என பக்தர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசு கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோயில் திருவிழாவிற்கு தடை விதித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 23 அன்று நடைபெற இருந்த சித்திரை திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பக்தர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது கோவிலுக்கு வருபவர்களை கட்டாயம் முக கவசம் அணிய சொல்லியும் வெப்ப பரிசோதனை செய்தும் கிருமி நாசினி தெளித்தும் கோவில் ஊழியர்கள் கோயில் உள்ளே அனுமதிக்கின்றனர்.

Updated On: 11 April 2021 5:45 AM GMT

Related News