திருத்துறைப்பூண்டி திருவாரூர் தொகுதிகள் மிகவும் பின் தங்கி உள்ளன: அண்ணாமலை

திருத்துறைப்பூண்டி  திருவாரூர் தொகுதிகள் மிகவும் பின் தங்கி உள்ளன: அண்ணாமலை
X

பைல் படம்

தமிழகத்தில் திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் தொகுதிகள் மிகவும் பின்தங்கியுள் ளனன என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

70 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்பவர்கள் இந்த தொகுதியின் வளர்ச்சி எதையும் செய்யவில்லை.தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திருத்துறைப்பூண்டி தொகுதி மற்றும் திருவாரூர் தொகுதி தான் மிகவும் பின் தங்கி உள்ளது என்றார் பாஜக தலைவர் அண்ணாமலை.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை வந்த தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அண்ணாநகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது . கொட்டும் மழையில் தொண்டர்களுடன் நடந்து வந்த அண்ணாமலை பழைய பஸ்நிலையம் காமராஜர் சிலை அருகில் பேசியதாவது:

70 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி செய்பவர்கள் இந்த தொகுதியின் வளர்ச்சி எதையும் செய்யவில்லை. இந்த தொகுதி என்ன வளர்ச்சி அடைந்திருக்கிறது? என்ற நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த தொகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன செய்தார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திருத்துறைப்பூண்டி தொகுதி மற்றும் திருவாரூர் தொகுதி தான் மிகவும் பின் தங்கி உள்ளது. தி.மு.க. அரசு மணல் விற்பனையில் ரூ.4700 கோடி ஊழல் செய்துள்ளது என்று அமலாக்கத்துறை கோர்ட்டில் கூறியுள்ளது.

பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ள மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சி பாதையில் சென்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் வளர்ச்சி மிகவும் மோசமாக உள்ளது. எனவே நீங்கள் தமிழகம் வளர்ச்சி அடைய பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். 45 லட்சம் விவசாயிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.எனவே தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும். பிரதமர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். எனவே வரும் காலங்களில் பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை வேதாரண்யம் தோப்புத்துறையில் என் மண் என்மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:தமிழகத்தில் 2026-ல் பா.ஜ.க. ஆட்சி அமைந்த உடன் இந்து சமய அறநிலையத்துறை என்பதே இருக்காது. திமுக தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறிவிட்டு தற்போது 6 ஆயிரம் ரூபாய் வழங்குகின்றனர். மீனவர்களுக்கு எதிரான கட்சி என்றால் அது தி.மு.க.தான்.இவ்வாறு அவர் பேசினார்.

என் மண் என் மக்கள் பாதயாத்திரையானது நாகை பகுதியில் நடைபெறும் என திட்டமிட்டு இருந்த நிலையில் அங்கு மழை பெய்வதாலும், புயல் உருவாகி கனமழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகி உள்ளதால் பாதயாத்திரை ஒத்திவைக்கப் படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!